Header Ads

முனைக்காடு மண்ணின் ஆளுமை : சிதம்பரப்பிள்ளை – பிரதேசசபை தலைவர்.

முனைக்காடு மண் பிறந்த ஆளுமைகளை வெளிக்கொணரும் செயற்பாட்டினை முனைமண் தளம் முன்னெடுக்கின்றது.
அரசியல், நாடகம், கல்வி, சமுகசேவையுடன் தொடர்புபட்ட முனைக்காடு கிராமத்தின் வாரிசு தாந்தியான் சிதம்பரபிள்ளையை அடையாளப்படுத்துகின்றது முனைமண்.

நாட்டில் 1984ம் ஆண்டு காலப்பகுதியில் கிராமோதய சபைகள் உருவாக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் முனைக்காடு கிராமத்தின் சார்பில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதேசசபையின் தலைவராகவும் பதவி வகித்தவர்தான் தாந்தியான் சிதம்பரப்பிள்ளை.


1956ல் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை முதலைக்குடா மகா வித்தியாலயத்திலும் பயின்று உயர்கல்வியை சிவாநந்த தேசிய பாடசாலையிலும் பயின்று பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். குறித்த பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடத்தினை சிறப்பு பாடமாக கற்று கலைமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

1978ல் கூட்டிறவு பரிசோதகர் நியமனத்தினைப் பெற்ற இவர், 1994ம் ஆண்டு வரை அப்பதவியினை வகித்தார்.

முனைக்காடு கிராமத்தில் 1971, 1972ம்; ஆண்டு காலப்பகுதியில் கலைக்கதிர் கலா மன்றத்தினை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர், நாடகங்களை எழுதியுள்ளதுடன், பட்டிமன்றங்களில் விவாதியா பங்கேற்றிருப்பதுடன், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவரால் எழுதப்பட்ட நாடகங்களுள் “அடிமை புருசனும் அடங்கா மனைவியும்” என்ற நாடகம் சிறப்பானதாக கூறப்படுகின்றது. அதேபோன்று 1976 காலப்பகுதியில் ஆற்றுகை செய்யப்பட்ட “இந்திராணியும் இலங்கை காதலும்” என்ற மேடைக்கூத்திலும் பங்கேற்றுள்ளார்.
ஒளிக்கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றிய இவர், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் உலகிப்போடி குடி மக்கள் சார்பான உறுப்பினராகவும், மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


தாந்தாமலை அன்னதானசபையின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பினை செய்துள்ளமையுடன், இவர் அன்னதானசபையில் பதவி வகித்த காலப்பகுதியில்தான் அன்னாதான சபைக்கான கட்டிட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
1994ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட போதும் வெற்றியீட்ட தவறிருக்கின்றார். தற்போதும் பல்வேறு உதவிகளை கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் இவர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சேவைகளை செய்ய முனைமண்ணின் மைந்தனை முனைமண் வாழும் போதே வாழ்த்துகின்றது.

தொடர்ந்தும் முனைமண் இன்னும் பல ஆளுமையாளர்களை வெளிக்காட்டும்.





கருத்துகள் இல்லை