Header Ads

வெள்ளிக்கிழமை இரவு பாரம்பரிய விளையாட்டுக்களுடன் ஆரம்பமாகிறது பொன்விழா

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் பொன்விழா இறுதி நிகழ்வுகள் இன்று(11) வெள்ளிக்கிழமை இரவு 07.00மணிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் முதலாம் கட்ட நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன.



நாளை(12) சனிக்கிழமை காலை 08மணிக்கு கரப்பந்தாட்டப்போட்டியின் இறுதிச்சுற்றும், 09மணிக்கு எல்லே இறுதிச்சுற்றும், 10.30மணிக்கு கிறிக்கட் இறுதி சுற்றும் பி.ப 2.30மணிக்கு உதைபந்தாட்ட லீக் மூன்றாம் தெரிவும் நடைபெற்று, பி.ப 4மணிக்கு அதிதிகளை வரவேற்றல், மற்றும் ஆரம்ப நிகழ்வுகளும் இடம்பெற்று உதைபந்தாட்ட இறுதிப்போட்டி, பரிசில்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
மேலும், நாளை(12) சனிக்கிழமை இரவு இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

இறுதி நிகழ்வுகள் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பு.தனராசா தலைமையில் நடைபெறவுள்ளதுடன் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலாளர்களான தெட்சணகௌரி தினேஸ், ந.வில்வரெத்தினம் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் சிறப்பு அதிதிகளாகவும், விசேட அதிதிகளாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் றஞ்சிதமலர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.







கருத்துகள் இல்லை