தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு
முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த துரைராசசிவம் பகவதன் என்ற மாணவன் கிழக்கு மாகாணமட்டத்தில் நடாத்தப்பட்ட, ஆங்கில கவிதை கூறுதல் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட குறித்த ஆங்கிலப் போட்டியில், குறித்த மாணவன், தரம் - 9பிரிவில், கோட்டம், வலயம், மாவட்ட ரீதியாக வெற்றிபெற்று, அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் இரண்டாம் இடத்தினைப் பெற்று, தேசியமட்ட போட்டிக்காக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.



Post a Comment