39ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்ததை மண்முனை தென்மேற்கில் கூறிய ஒளிக்கல்லூரி
மதுரையில் நிகழ்ந்த ஐந்தாவது அனைத்துலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு பற்றிய கருத்தரங்கினை 08.02.1981ல் ஒளிக்கல்லூரி அமைப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நடத்தியிருந்தமை வரலாற்றுப் பதிவே.
இற்றைக்கு 39ஆண்டுகளுக்கு முன்னர் இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தமை தமிழ் மீது இருந்த பற்றும், அப்போதைய இளைஞர்களின் நீண்டகால சிந்தனையும் வெளிப்பட்டு நிற்கின்றது. இதற்கும் மேலாக தமிழறிஞர், வித்துவான்; எவ்.எக்ஸ்.சி.நடராசா போன்றோர்களை வளவாளர்களாக கொண்டு மாணவர்களுக்கு அவ்விடயத்தினை கொண்டு சேர்த்திருக்கின்றமை இன்னோர் தளத்திற்கு இட்டுச்செல்கின்றது.
1978ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் விளைவாக சீர்குலைந்துபோன படுவான்கரை மக்களின் கல்விநடவடிக்கைகளுக்கு புத்தூக்கமளித்து வளர்க்கும் பொருட்டு ஸ்தாபகர் மா.செல்வராஜா உள்ளத்தில் உதித்த சிந்தனையால், 14.04.1979 சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று ஒளிக்கல்லூரி அமைப்பு உதயமானது.
அவ்வமைப்பின் ஊடாக பல்வேறு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கிலும், அறிவுத்திறனையும், ஆற்றலைதூண்டும் வகையிலும்; அச்செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறானதொரு செயற்பாடுகளில், ஒளிக்கல்லூரியினால் அவ்வவ்போது முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்களும் மிகபயனுறுதி மிக்கதாகவே இருந்தன. ஒவ்வொரு துறையிலும் வல்லமை கொண்டவர்களைக் கொண்டே இக்கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றமையும் அக்காலத்திற்கு பொருத்தமானதே.
இந்திய தேசத்தில் மதுரையில் நடந்தேறிய ஐந்தாவது அனைத்துலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு பற்றிய விடயங்கள், இலங்கை தீவில் அமைந்துள்ள தேனாட்டின், உலகநாச்சி ஆட்சிப்புரிந்த தேசமதில், அமைந்துள்ள படுவான்கரை மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. தற்காலம் போன்று நவீன தொடர்பாடல் வசதிகளின் வருகை இல்லாத சந்தர்ப்பத்திலும், பாதை வழி போக்குவரத்திலும் சிரமங்கள், தடைகள், சிக்கல்கள் நிறைந்ததொரு இக்கட்டாண சூழலிலும் அவ்வாறான கருத்தரங்குகள் நடாத்தப்பட்டமை முன்னுதாரணமான செயற்பாடே.
இவ்வாறான கருத்தரங்குகளை, அம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழ்வித்துவான் போன்றோர்களை அழைத்து செய்வதென்பது, அதே அளவில் இல்லாது விடினும், சிறிய அளவிலான தமிழ் ஆராய்ச்சி மாநாடாக இது அமைந்திருக்கலாம். இக்கருத்தரங்கிலே, தமிழறிஞர் வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா, அருட்திரு யோசப்மேரி அடிகள் ஆகியோர் உரையாற்றியிருக்கின்றனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அப்போதைய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பி.வீரசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
வசதிகள், தொடர்பாடல் குறைந்த காலச்சூழலிலே தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுள்ள மண்முனை தென்மேற்கில், தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்று நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
வ.துசாந்தன்

Post a Comment