உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட கிண்ணம் மட்டு றோயல் வசமானது.
இராமகிருஷ்ணா விளையாட்டு கழக மைதானத்தில் ஆனி 18,19ம் திகதிகளில் கழகத்தின் 53 ஆவது ஆண்டு நிறைவு, கிராமத்தின் வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்து உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய 36 கழகங்களில் இறுதி போட்டி மட்டு றோயல் அணியினருக்கும், முனைக்காடு இராமகிருஷ்ணா அணியினருக்கும் இடம்பெற்றது. இதன்போது 1:0 என்ற வெற்றிக்கோளுடன் மட்டு றோயல் அணி கிண்ணத்தை தனதாக்கியது.
பு.தனராசா தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சி.சந்திரகாந்தன், பாடசாலை அதிபர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்துகொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு பணப்பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment