Header Ads

முனைக்காடு தேசிய பாடசாலையில் தரம் 1 மாணவர்கள் வரவேற்பு

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் மூ.உதயகுமாரன், ஆசிரிய ஆலோசகர் ம.லச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தரம் 1 மாணவர்கள்  பூமாலை அணிவித்து , இனிப்புகள் வழங்கி   வரவேற்கப்பட்டனர். 








கருத்துகள் இல்லை