Header Ads

பேச்சு போட்டியில் முனைக்காடு தேசிய பாடசாலை மாணவி தேசியத்தில் மூன்றாம் இடம்

 


இலங்கை கூட்டுறவு சபையினால் நடாத்தப்பட்ட  பேச்சு போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) கல்வி பயிலும்  பத்மநாதன் கோபிகா தேசிய மட்ட  போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.


 இலங்கை கூட்டுறவு சபையின் 100 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  இப்போட்டி நடாத்தப்பட்டது. இதில் முதலாம் பிரிவில் பங்கேற்ற குறித்த மாணவி  மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட  போட்டியில் பங்கேற்று  மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மேலும் இரு மாணவர்கள்  இரண்டாம் பிரிவில் பங்குகொண்டு மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும்,   3ம்இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை