மாவட்டத்தில் சாதித்த முனைக்காடு தேசிய பாடசாலை மாணவிகள்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்ற இரு மாணவிகள், வெளியாகி உள்ள உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் 2ம், 4ம் நிலைகளை பெற்று வரலாற்று சாதனையை நிலை நாட்டி உள்ளனர்.
அ. அஜந்தினி 2ம் நிலையையும் கௌசிகா 4ம் நிலையையும் பெற்றுள்ளதுடன், மாவட்டத்தில் 100க்கும் குறைவான நிலையை 5மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.
Post a Comment