Header Ads

தேசியத்தில் சாதித்த முனைக்காடு பாடசாலை மாணவி


50 வது பொதுநலவாய அமைப்பு தினத்தினை நினைவு கூரும் வகையில் பொதுநலவாய அமைப்பு செயலகமும் இலங்கை கல்வி அமைச்சும் இணைந்து தேசிய ரீதியில் நடாத்திய ஆங்கில கட்டுரை போட்டியில் மட்டகளப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவி மேகநாதன் நிவேதிதா நான்காவது இடத்தினை பெற்று சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

குறித்த மாணவி சமூக விஞ்ஞான போட்டியில் 2 தடவைகள் தேசிய ரீதியில் முதலாவது இடத்தினை பெற்று சாதனை நிலை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்தில் சாதனையினை நிலை நாட்டிய இம் மாணவியை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் ந. குகதாசன், வலயத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர்களான K . ரகுகரன், R. ஜீவானந்தராஜா, ஆங்கில பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் V.திவாகரன் ஆகியோர் பாடசாலைக்கு நேரடியாக சென்று கௌராவித்தமையோடு இம் மாணவியை வழிப்படுத்திய செல்வி K. கோபினகௌரி ஆசிரியையினையும் பாராட்டினர்.

சாதனையை நிலை நாட்டிய மாணவிக்கு முனைமண்ணின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.


கருத்துகள் இல்லை