பவளக்கொடி வடமோடிக் கூத்து சம்பிரதாய பூர்வமாக எதிர்வரும் 31.05.2014ம் திகதி அரங்கேற்றம்
நாகசக்தி கலை மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான கலைச் செயற்பாட்டின்
நிமிர்த்தம் இவ்வாண்டு பவளக்கொடி வடமோடிக் கூத்து சம்பிரதாய பூர்வமாக
எதிர்வரும் 31.05.2014ம் திகதி சனிக்கிழமை பி.ப.06.30 மணிக்கு முனைக்காடு
நாகலிங்கேஸ்வரர் ஆலய முற்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட இருக்கின்றது.கூத்து வெறுமனே ஒரு பொழுதுபோக்கு கலையாக மட்டும் அல்லாமல் நாங்கள் பார்க்கத் தவறிய பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கூத்து அளிக்கை,அளிக்கையின் படிமுறை,கூத்துப்பிரதி கட்டமைக்கப்பட்டுள்ள விதம், அலங்கரிக்கப்பட்டகளரி,அதில் கட்டப்படும் தோரணம் என்பன அன்றைய கலைஞர்களின் கலையாளுமையின் நுணுக்கத்தினையும்,அறிவினையும் புகட்டி நிற்கின்றது.
கூத்தில் பார்வையாளர்கள் தங்களை கட்டுப்படுத்தி நிகழ்வினை பார்க்கவிடாமல் சுதந்திரமாகவும்,எளிமையாகவும் தொடர்பு கொள்ளும் ஓர் கலை வடிவமாக காணப்படுகின்றது. இதில் இருக்கின்ற பல செயற்பாடுகள் மனிதர்களை பல்வேறு திசைக்கு கொண்டு சென்று உளவியல், உடல் ரீதியாக பல மாற்றங்களை செய்கின்றது. என்பது உண்மை இதில் ஈடுபடுகின்ற கலைஞர்கள் கூத்து தொடங்கி அரங்கேற்றம் வரையான காலப்பகுதியில் பல விட்டு கொடுப்புக்களையும்,தியாகங்களையும் செய்து அளிக்கை செய்கின்றனர். கூத்துக் கலையை செய்கின்ற ஒரு கலைஞர் சமூகத்தில் ஓர் சிறந்த இடத்தில் இருப்பார். அவ்வாறு இக்கூத்துக் கலைக்கு எடுத்துக் காட்டப்படத்தக்க காத்திரம் உண்டு.
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் எமது மூத்த கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட இக் கூத்து மீண்டும் எமது கலைமன்றத்தினால் இவ்வாண்டு அவர்களை நினைவு கூறுவதாகவும், சமர்ப்பணமாகவும் இடம் பெறுவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். கூத்தில் ஊர்கூடுதல்,சட்டம் கொடுத்தல், பழகுதல், சதங்கை அணிதல், அடுக்குப்பார்த்தல், அரங்கேற்றம் செய்தல் என்ற படிமுறையில் இறுதி நிகழ்வான மிகமுக்கியமாக கருதப்படும் அரங்கேற்றம் மேற்கூறப்பட்ட திகதியில் இடம்பெற இருப்பதனால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கதைச் சுருக்கம்
மதுரை மாநகரை ஆழுகின்ற அல்லி மகாராணியின் மகன் புலேந்திரன் ஏனைய ராஜ மைந்தர்களுடன் கூடி விளையாடிதேர் உருட்டிவிளையாடும் போது புலேந்திரனுடைய தேரினை உடைத்து விடுகின்றனர். கோபமடைந்த அவன் தனது தாயிடம் சென்று பவளத்தேர் செய்து தரும்படி கூறி அடம் பிடித்தான். அதற்கு அல்லி உடன் பட்டு பவளம் எடுப்பதற்காக தனது கணவனான அருச்சுனனைத் தவிர எவராலும் முடியாது என்பதால் அவனை தனது நாட்டுக்கு அழைப்பிக்க வேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு சு10லநோய் ஏற்;பட்டதாக தருமருக்கு கடிதம் அனுப்பினாள். அதனை வாசித்த தருமர் அதிர்ச்சியுற்று தனது தம்பி தன்னிடம் இல்லாத காரணத்தால் தாம்புலம் தரிக்கும்போது தனக்கு பாக்கடைத்து உயிர் போகும் தருவாயில் உள்ளதாக பறைசாற்றி அருச்சுனன் அறியும் படிசெய்து அருச்சுனரை வரவழைத்து கிரு~;ணருடன் அருச்சுனரை அல்லிராச்சியம் அனுப்புகின்றார். அங்கு அல்லி நடந்தவற்றைக் கூறி பவளம் எடுப்பதற்காக கிரு~;ணரையும்ää அருச்சுனரையும் சேராம்புதேசம் அனுப்புகின்றாள். அங்கு சென்று சேராம்பு மன்னனுடைய மகளாகிய பவளக்கொடியை கண்ட அருச்சுனன் அவள் மீதுமையல் கொள்கின்றான் இவ்வாறே கதைதொடர்கின்றது……..





Post a Comment