
முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 06.06.2014 அன்று
சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட
கிரியைகளை தொடர்ந்து 11.06.2014(நேற்று) புதன்கிழமை மு.ப 10.50 மணி
தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் மகா கும்பாபிசேகம் மூலமூர்த்தியாகிய
விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவாரத்தெய்வங்களுக்கும் மேள வாத்தியங்கள்
ஒலிக்க அடியார்களின் "அரொகரா" என்ற கோசத்துடன் சிறப்பாக நடைபெற்றது
வரலாற்று சிறப்புகூறும் இவ் ஆலயம் 20 ஆண்டுகளின் பின்னர் இருதள முறையில்
ஆகம விதிக்கமைய அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான அடியார்கள்
சூழனடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment