Header Ads

பாரம்பரிய கலைகளின் சங்கமம்

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தினங்கள் (10,11,12 வெள்ளி,சனி, ஞாயிறு) வெவ்வேறு இடங்களில் பாரம்பரிய கலைகளின் சங்கமம் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
அதன் முதன்னாள் நிகழ்வாகிய நேற்று(10) வெள்ளிக்கிழமை நாவற்குடா இந்து கலசார நிலையத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்று மாலை 04மணி தொடக்கம் 10மணி வரை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கன்னன்குடா கதிரவன் கலைக்குழுவினரின் கரகமும், வந்தாறுமூலை நவரெத்தினம் கலைக்குழுவினரின் மகிடிக்கூத்தும், மலையக கூத்தியல் குழுவினரின் தப்ப இசையும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இன்று(11) சனிக்கிழமை காலை 09.00மணிக்கு நாவற்குடா இந்து கலாசார  நிலையத்தில் கலைஞர் கலந்துரையாடல்,வசந்தன் கூத்து போன்றனவும் மாலை 04.00மணிக்கு புதுக்குடியிருப்பு கண்ணகையம்மன் ஆயல முன்றலில் முனைக்காடு நாகசக்தி கலைக்கழகத்தின் வடமோடிக்கூத்து, பொகந்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினரின் காமன் கூத்தும், வாகரை ஆதிவாசி கலைக்குழுவினரின் வேடுவர் ஆட்டமும், பக்தநந்தனார் இணுவில் கந்தசாமி கோயில் இளந்தொண்டர் சபையினரின் இசை நாடகமும் இடம்பெறவுளள்ளது.

அதுபோன்று நாளை(12) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் வசந்தன் கூத்து, இசைநாடகம் போன்றனவும் மாலை காமன் கூத்து, கலைஞர் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













கருத்துகள் இல்லை