முனைமண் ஈன்றெடுத்த மா.சத்தியநாயகத்திற்கு பிரதேச சிறந்த விளையாட்டு வீரர் கௌரவிப்பு
1980இற்கு பிற்பட்ட காலத்தில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தில் அங்கத்தவராகவும் செயற்பட்ட இவர் பிரதேச விளையாட்டுக்களில் 100m ஓட்டம், 200m ஓட்டம், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், 4X100, 4X200 குறிப்பிட்டளவில் வெற்றி பெற்றாலும். 1987, 1988, 1989, 1990, 1991ம் ஆண்டு காலப்பகுதியில் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதை விட மாவட்ட மட்டத்தில் 100அ, 200அ, ஓட்டங்களில் 1ம் இடம், 2ம் இடங்கள் பெற்றிருந்ததாலும் மாகாணம் செல்லும் ஆர்வம் இல்லாதிருந்தமையும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வழிகாட்டல் இன்மையாலும் மாகாண மட்டத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணியில் நீண்டகால வீரன், சிறப்பாக ஓடும் ஆற்றல் இருந்த காரணத்தினால் இரண்டாம் தர வரிசை ஆட்டம் வழங்கப்பட்டிருந்தது. எதிரணியினர் கோள் புகுத்தவிடாது தடுக்கும் பணிதான் கூடுதலாக , முன்னணி வீரர் ய+ட், ஜெகன் போன்றோரால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. 1986ம்ஆண்டு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் நடாத்திய கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சிறப்பாட்டத்திற்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
விளையாட்டு வீரனாக மட்டுமின்று கழகத்தை வழிநடத்தும் தலைமைத்துவப் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய கழகத்தை கொண்டு சிறப்பாக வழிநடத்தி கழகம் பிரதேசம், மாவட்ட மட்டங்களில் சென்று வெற்றிபெறுவதற்கு உறுதுணையாக இருந்ததுடன் இன்று வரைக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டோடு மட்டும் நின்றுவிடாது கிராமத்தில் உள்ள பல அமைப்புக்களில் உயர் பதவிகளில் இருந்து சமூக சேவை செய்வதுடன், ஆசிரியராகவிருந்த இவர் தற்போது அதிபராகவும் இருந்து சிறந்த சேவை புரிந்து வருகின்றனர்.
இவருடைய விளையாட்டு திறமையையும், சமூகசேவையையும் கருத்தில் கொண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச விளையாட்டு விழாவில் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் என்ற கௌரவமும் 27.03.2015ம் திகதி வழங்கப்பட்டது.
இவருக்கு எமது முனைமண்ணின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழும் போதே வாழ்த்துவோம்.



Post a Comment