Header Ads

நச்சுப்பொய்கை வடமோடிக் கூத்து சலங்கை அணி விழா (video)

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் 2015ம் ஆண்டிற்கான கலை செயற்பாட்டின் ஒரு அங்கமாக நச்சுப்பொய்கை எனும் வடமோடிக் கூத்து சலங்கை அணி விழா இன்று(12) வெள்ளிக்கிழமை நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கூத்துக்கலையின் ஒரு முக்கிய நிகழ்வாக சலங்கை அணி விழா கருதப்படுகின்றது. கூத்துக் கலையில் பாத்திரம் ஏற்கின்ற அனைத்து
கலைஞர்களுக்கும் ஒரு கூத்து பழக்கப்பட்டு  அக் கூத்தில் பாத்திரம் ஏற்று ஆடபவர்களுக்கு முதன்முறையாக வைபவரீதியாக சலங்கையை அணிவதனையே ஒரு விழவாக கொள்கின்றனர். இதனையே சலங்கை அணிவிழா என்கின்றனர்.

இங்கு இக் கூத்தில் பாத்திரம் ஏற்று ஆடுகின்ற கலைஞர்கள் இளைஞர்களும், சிறுவர்களுமே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.












கருத்துகள் இல்லை