முனைக்காடு கிராமத்தின் மைந்தன் பா.இன்பராசாவுக்கு ஊடகத்துறைக்கான கலைச்சுடர் விருது
முனைக்காடு கிராமத்தில் பிறந்து 35வருடங்கள் ஊடகத்துறைக்குள் நுழைந்து சேவையாற்றி கொண்டிருக்கும் பா.இன்பராசா அவர்களை கௌரவித்து பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் ஊடகத்துறைக்கான கலைச்சுடர் விருது நேற்று(07) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்கமழும் மங்கல விழாவின் போது வழங்கி வைத்தது.
இவருக்கான பொன்னாடை மற்றும் விருது என்பவற்றை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் வழங்கி வைத்தார்.
முனைமண் ஈன்றெடுத்த மைந்தனுக்கு எம் முனைமண்ணின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.



Post a Comment