Header Ads

கௌரவிப்பும், வங்கிக்கணக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வும்

முனைக்காடு கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பும், இல்லந்தோறும் சேமிப்பு எனும் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வும் இன்று(14) சனிக்கிழமை இ.குகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இவ்வருடம் தரம் - 5புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மூன்று மாணவர்களுக்கும், முனைக்காடு சாரதா வித்தியாலய இரண்டு மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு புத்தகத்தில் ரூ 5000ம் இட்டு வங்கிப்புத்தகமும் இதற்காக உழைத்து நின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை மா.குமாரசாமி வழங்கியிருந்தார்.

மேலும் இல்லங்கள் தோறும் சேமிப்பு எனும் தொனிப்பொருளில் முனைக்காடு கிராமத்தில் புதிதாக பிறந்த பிள்ளைகளுக்கு அவர்களின் பெயர்களில் ரூ 1000ம் வீதம் வங்கிக்கணக்கில் இட்டு வங்கிப்புத்தகம் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை தா.வேதநாயகம் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.