Header Ads

முனைக்காடு விவே.வித்தியாலய மாணவர்களுக்கு பல பரிசில்கள்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும், இணைந்து நடாத்திய 2015ம் ஆண்டிற்கான போட்டி நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றீயிட்டிய மாணவர்களுக்கு இன்று(29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலாசார விழாவில் பரிசில்கள் வழங்கப்பட்டது.

அவ்வகையில் கனிஸ்ட பிரிவு கட்டுரை போட்டியில் 1ம், 2ம், 3ம் இடங்களை முறையே முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களான து.டிலக்சனா, ர.பிரவிகா, த.வரிசனா பெற்றனர். அதே போன்று கனிஸ்ட பிரிவு கவிதைப் போட்டியில் 2ம் இடத்தினை கு.கனிஸ்டனும், கையெழுத்துப் போட்டி பாலர் பிரிவில் 2ம், 3ம் இடங்களை முறையே முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களான கோ.கதிசனா, சி.லோகஜன் ஆகியோரும் பெற்றனர்.

இம் மாணவர்கள் அனைவருக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்கள்.