பா.நல்லதம்பிக்கு வசந்தன் கலைச் செம்மல் விருது
முனைக்காடு கிராமத்தினை பிறப்பிடமாக கொண்ட பாலிப்போடி நல்லதம்பி அவர்களின் கலைப்பணிக்காக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும், இணைந்து நடாத்திய 2015ம் ஆண்டிற்கான கலாசார விழாவில் இன்று(29) செவ்வாய்க்கிழமை வசந்தன் கலைச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர் வசந்தன் மட்டுமின்றி காவியம் இயற்றல், பாடுதல், காவடி, கும்மி, கவி போன்றவற்றில் சிறந்து விளங்குவதுடன் கலைமுதுசம், கிராமியக்கலைச்சுடர், மதுரக்கவியோன், வசந்தன் புகழ் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு எமது முனைமண்ணின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.



Post a Comment