கூத்துபாரம்பரிய கலையுலகிற்கு இருள்நிறைந்த கரிநாள்
அண்ணாவியார் வீரக்குட்டி அரசரெத்தினம்(சேனாதிபதி) அவர்கள் மண்ணுலகம்விட்டு விண்ணுலகம் சென்றநாள் (26/12/2015)
ஆண்டு வீரக்குட்டி - செம்பகனாச்சி தம்பதியினருக்கு 7/4/1955 ம் ஆண்டு
மகனாகப் பிறந்த இவர் சிறுவயதுமுதல் கூத்து பார்ப்பதன் காரணமாக
கூத்துக்கலையின்பால் ஈர்க்கப்பட்டு பின் பல கூத்துக்களில் ஆடி,
அண்ணாவியார்களான தெய்வநாயகம்(கொத்தியாபுலை),
துரையர்(கன்னன்குடா),தாந்திப்போடி(சின்னவட்டை)
போன்றோர்களிடம் மத்தளம் இசைக்கும்வித்தைகள், ஆட்டமுறைகள்,ஆட்டக்கோலங்கள்
போன்றவற்றை கற்றுக்கொண்ட இவர் நந்தனார் நாடகம் தென்மோடிக்கூத்தின் மூலம்
அண்ணாவியானார்.
நந்தனார்
நாடகம்,தமிழ் அறியும் பெருமான்,கற்ப்புக்கரசி போன்ற கூத்துக்களை பழக்கி
அரங்கேற்றியுள்ளார். அதேவேளை நாகசக்திகலை மன்றத்தின் ஆற்றுகைகளான
அலங்காரரூபன்,பவளக்கொடிகூத்துக்களுக்கு உதவிஅண்ணாவியாராகவும்
செயற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாகசக்தி கலை மன்றத்தின் 2016ம் ஆண்டுக்கான ஆற்றுகையான 'மயில் ராவணன் சண்டை' தென்மோடிக்கூத்து 24/12/2015 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. இன்நிகழ்வின் போது ப.கதிர்காமனாதன் அண்ணாவியருடன் உதவி அண்ணாவியாராக செயற்பட்டார்.
தென்மோடி கூத்துக்களின் சகல நுணுக்கங்கள்,வித்தைகள் அறிந்த ஆளுமை மிக்க அண்ணாவியாரும்.நாகசக்தி கலைமன்றத்தின் உறுப்பினருமான அமரர் வீ.அரசரெத்தினம்(சேனாதிபதி) அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறையை வேண்டி நிற்க்கின்றனர் நாகசக்தி கலைமன்றத்தினர்... நாகசக்தி கலை மன்றம்

Post a Comment