முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1இற்கு புதிதாக அனுமதி
பெற்ற மாணவர்களை தரம் 2 மாணவர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கும்
நிகழ்வு இன்று (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வுடன் இப்பாடசாலையில் புதிதாக தரம் 6 இற்கு இணைந்து கொண்ட 30 மாணவர்களும் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் உரையாற்றுகையில் பெற்றார்களின்
பங்களிப்பு முழுமையாக இடம்பெறும் போதுதான் கல்வி அடைவும், பாடசாலையின்
வளர்ச்சியும் உயரும். பெற்றார் பாடசாலையுடன் இணையவேண்டியது அவசியம்
எனக்கேட்டுக்கொண்டார்.
அதிபர் திரு மூ.சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ந.தயாசீலன், உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ர.கருணாநிதி, சே.ஆ.ஆலோசகர் குகாநிதி மற்றும் பெற்றார், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.









Post a Comment