Header Ads

முனைக்காடு கண்ணகி அம்மன் ஆலய கல்யாணக்கால் வெட்டும் வைபவம்

முனைக்காடு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் 4ம் நாளாகிய நேற்று(19) வியாழக்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் நடைபெற்றது.

முனைக்காடு தெற்கில் அமைந்துள்ள சிவசூரியம் குருக்கள் இல்லத்தில் இருந்து வெட்டப்பட்ட கல்யாணக்காலுக்கு அபிசேகப்பூசைகள் நடைபெற்று அங்கிருந்து மேளதாள ஓசைகள் முழங்க கல்யாணக்கால் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு நடப்பட்டது.

இதன் போது அடியார்கள் நிறைகுடம், குத்துவிளக்கேற்றி பத்தினி தெய்வமாகிய கண்ணகியை வழிபட்டனர்.