கண்ணகியம்மன் குளிர்த்தில் சடங்கு
முனைக்காடு கண்ணகியம்மன் சடங்கு உற்சவமானது கடந்த 16.05.2016 அன்று ஆரம்பிக்கப்பட்டு 21.05.2016 அதிகாலை அம்மனின் திருக்குளிர்த்தி ஆடும் வைபவத்துடன் இனிது நிறைவு பெற்றது பல நூற்றுக்கணக்கான அடியார்கள் சூழ்ந்து நிற்க மிகச்சிறப்பான முறையில் குளிர்த்தில் நிறைவுற்றமை குறிப்பிடக்கூடியது.
இவ் ஐந்து நாள் சடங்கு உற்சவமானது சிவஸ்ரீ கி. சாம்பசிவக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வே.சிவசூரியம் அவர்களும் பிரசன்னமாயிருந்தார் இச்சடங்கு காலங்களில் நடைபெறும் கலை நிகழ்வுகளில் அறிவுக்களஞ்சியப் போட்டியினை முன்னின்று நடாத்தி வரும் திரு.செ முருகுப்பிள்ளை ஆசிரியரும் திரு.ஆ.கோபாலபிள்ளை ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடலாம்



Post a Comment