நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 1008சங்குகளாலான சங்காபிசேகம்
மட்டக்களப்பு முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்குகளாலான சங்காபிசேம் இன்று(23) வியாழக்கிழமை இடம்பெற்றது.
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து அடியார்கள் பக்தி பூர்வமாக சிரசில் பால்குடங்களை ஏந்தி வருகை தந்து நாகலிங்கேஸ்வரப் பெருமானுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிசேகம் செய்ததை தொடர்ந்து 1008 சங்குகளால் சங்காபிசேகமும் நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ப.மானாகப்போடி குருக்கள் தலைமையிலான குழுவினரால் கிரியைகள் நடைபெற்று அபிசேக, அலங்காரபூசைகளும் மேளதாள வாத்தியங்கள் முழுங்க அடியார்கள் அரோகரா கோசத்துடன் நாகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு பூசையும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment