Header Ads

முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய இறுதி நாள்

எழில் கொஞ்சும் முனைக்காடு மண்ணில் தான்தோன்றியப்பன் திருவேட்டையாட தலமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீரபத்திரப் பெருமானுக்கு 29.06.2016 அன்று ஆரம்பிக்கப்பட்ட சடங்கு உற்சவம்
03.07.2016 அன்று தீ மிதிப்பும் பள்ளயமும் நடைபெற்று 04.07.2016 திங்கட்கிழமை சர்க்கரை அமுதுடன் இனிது நிறைவுற்றது. பல்லாயிரக்கணக்கான அடியார்கள் வருகைதந்து எம்பெருமானின் மதிய பூசையில் கலந்து கொண்டதுடன் தீமிதிப்பு நிழ்விலும் கலந்து அருள்பெற்றேகினர். இவ்வாண்டுக்கான தீக்கட்டைகள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து வீதியூர்வலமாக எழுந்தருளப்பட்டது.