தண்டணை உதை தவறவிடப்பட்டதால் 1ம் இடத்தை இழந்தது முனைக்காடு இராமகிருஸ்ணா
பன்சேனை உதயொளி விளையாட்டுக்கழகம் தமது கிராமத்தின் உறவுகளின் ஞாபகார்த்தமாக இவ்வாண்டு ஆவணி மாதம் 13,14ம் திகதிகளில் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் பல அணிகளை வெற்றி
கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் நட்சத்திர வீரரொருவரின் தண்டணை உதை கோளாக தவறியதால் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கழகத்திடம் தோல்வியை கண்டு இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைபெற்று முனைக்காடு மண்ணுக்கு பெருமை சேர்த்தது.
கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் இவ்வாண்டு அதிக வெற்றிக்கிண்ணங்களை தனதாக்கிவரும் முனைக்காடு இராமகிருஸ்ணாவின் சொத்துக்களாக விளங்கும் அனைத்து வீரர்களுக்கும் எமது முனைமண் இணைய வாழ்த்துக்கள்.



Post a Comment