Header Ads

மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் நாகசக்தி கலை மன்றத்தின் இன்னியம், கூத்து

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் தமிழரின் பாரம்பரிய கலையான இன்னியநடனம் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் நீர்பாசன திணைக்களம், வர்த்தக சங்கம் ஆகிய திருவிழா உபயகார்களின் இரு தினங்களும் பட்டுக்கொண்டுபோதல் நிகழ்வின் போது அதனை வரவேற்று நிகழ்த்தப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கூத்து ஆற்றுகை நிகழ்வில் வர்த்தகசங்க திருவிழாவன்று நாகசக்தி கலை மன்றத்தின் அபிமன்னன் சண்டை கூத்தும் ஆற்றுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.