முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் 2இடம்
அரசடித்திவு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் 44வது அகவையை முன்னிட்டு நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் 2இடத்தினை பெற்றுக் கொண்டது.
இப் போட்டியிலே முதல் போட்டியில் அம்பறை மாவட்டத்தை சேர்ந்த வளத்தாப்பிட்டி அணியினருக்கு 2கோள்களையும் காஞ்சிரன்குடா ஜெகன் அணிக்கு தண்டனை உதைமூலமும் மகிழடித்திவு மகிழை அணியினருக்கு 1கோள்ளினையும் மண்டூர் மதியொளி அணியினருக்கு 1 கோளினையும் இட்டு இறுதி சுற்றுக்குள் நுழைந்தது இறுதி சுற்றில் முதலைக்குடா விநாயகர் அணியினரை எதிர்த்தாடி தண்டனை உதையின் மூலம் தோல்வியடைந்து 2இடத்தினை பெற்றுக் கொண்டது.
இத் தொடரில் சிறந்த விளையாட்டு வீரனாக எமது கழகத்தை சேர்ந்த ப.எழில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்
Post a Comment