சர்வதேச எழுத்தறிவு தினத்தினை சிறப்பித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் எழுத்தறிவு தின விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊர்வலமும் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.கரிகராஜ், ஆசிரிய ஆலோசகர்களான ம.லச்சுதன், ச.குகாநிதி, விடுதிக்கல் வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment