Header Ads

பிரதேச இலக்கிய விழாவில் முனைக்காடு பாடசாலை மாணவர்கள் 09பேர் வெற்றி

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தினைச் சேர்ந்த 09மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கனிஸ்ட பிரிவு கட்டுரை, கவிதை பாடல் போட்டி சிரேஸ்ட பிரிவு கட்டுரைப்போட்டி ஆகியவற்றிலே குறித்த மாணவர்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களினை பெற்றுள்ளனர்.

மேலும் இலக்கிய விழாவின் இறுதி நிகழ்வின் போது குறித்த பாடசாலை மாணவர்களினால் நடிக்கப்பட்ட கொஞ்சம் யோசிங்கோ நடாகமும் மேடையேற்றப்பட்டது.


இவர்கள் அனைவருக்கும் முனைமண்ணின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்