Header Ads

எட்டாக்கனியானது முனைக்காடு இராமக்கிருஸ்ணாவிற்கு படுவான் சமர்

மிகச்சிறப்பாக கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் படுவான் சமரில் அதிகமான ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு ஆண்டும்
களமிறங்கும் முனைக்காடு இராமக்கிருஸ்ணா 7 ஆண்டுகளில் 6 இறுதிச்சுற்றுக்குள் நுழைந்து 3 தடவை சம்பியனாகியது. அதே போன்று இவ்வாண்டு ஆனி மாதம் 17,18 திகதிகளில் நடாத்திய SEASON 8 படுவான் சமர் போட்டியில் ஆரம்பத்திலே பலம் பொருந்திய அம்பாரை மாவட்ட அணி வளர்த்தாப்பிட்டியுடன் மோதி 1ம் சுற்றில் வெற்றி பெற்று 2ம் சுற்றில் காஞ்சுரங்குடா ஜெகன் அணியிணருடன் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தெரிவாகியது. வீரர்களின் அயராத முயற்சியிலும் ரசிகர்களின் ஆதரவுடன் காலிறுதியில் குருந்தையடிமுன்மாரி ரென்ஸ்ரார் அணியினரையும் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இராமகிருஸ்ணா அரையிறுதியில் முதலைக்குடா விநாயகர் அணியினருடன் தண்டனை உதை மூலம் தோல்வியினை தழுவி 3ம் இடத்துக்கான கிண்ணத்தையே பெறமுடிந்தது. பல ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கோலாகலாமான  முறையில் இடம்பெற்ற போட்டியில் முதலைக்குடா விநாயகர் அணி 1ம் இடத்தையும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.