Header Ads

நீண்ட நாட்களின் பின்னர் மண்டூரில் சாதனை

மண்டூர் கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகம் தமது கழகத்தின் 33 வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய அணிக்கு 7பேர் கொண்ட
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆடி 29,30 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது. 

பல பிரதேசங்களிலும் இருந்து கலந்து கொண்ட அணிகளின் மத்தியில் இறுதிச் போட்டிக்கு சொறிக்கல்முனை எல்மோ அணியினரும் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர். 

குறித்த நேரத்தில் கோள்களை போட இரு அணிகளும் தவறியமையினால் தண்டணைஉதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதனூடாக முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் வெற்றிபெற்றமை குறிப்பிடலாம். 

போட்டியில் கலந்து கொண்ட நேரத்தில் சகல சுற்றுக்களிலும் தம்மை எதிர் கொண்ட அணிகளுக்கு கொள்களை போட்டு தமது திறமையினை வெளிக்காட்டி அணி இறுதிப்போட்டியில் கோள்களை போடத்தவறியமை கேள்வியாகவே காணப்பட்டது. இருந்தும் தண்டணை உதையினை சிறப்பாக பயன்படுத்தி இவ்வெற்றியினை பெற்றுள்ளனர்.