Header Ads

மா.வன்னியசிங்கம், 39வருட அரச சேவையிலிருந்து ஓய்வு

மட்டக்களப்பு, முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த மாசிலாமணி வன்னியசிங்கம் தனது 39வருட அரசசேவையிலிருந்து கடந்த ஒக்டோபர் 12ம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றார்.

1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ம் திகதி பிறந்த மாசிலாமணி வன்னியசிங்கம், தனது ஆரம்ப கல்வியை முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்திலும், முதலைக்குடா மகா வித்தியாலயத்திலும் பயின்று பின் உயர்கல்வியை சிவானந்த தேசிய பாடசாலையில் கல்வி கற்றார்.


 1978ம் ஆண்டு பயிர்செய்கை உத்தியோகத்தராக அரசசேவைக்குள் உள்நுழைந்து, கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்தில் பயிர்செய்கை உத்தியோகத்தராக கடமையாற்றினார். பின் 1989ம் ஆண்டு கிராமசேவை உத்தியோகத்தராக பதவி பெற்றார். கொக்கட்டிச்சோலை 10ம் வட்டாரத்தில் கிராமசேவையாற்றியதை தொடர்ந்து, பின் ஆசிரியர் சேவைக்குள் நுழைந்தார்.  ஆசிரியப் பணியை மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பித்த இவர்,  முதலைக்குடா, குளுவினமடு, ஆகிய பாடசாலைகளில் பணியாற்றி படையாண்டாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பணியாற்றிய நிலையில், ஒக்டோபர் 12ம் திகதி ஓய்வுபெற்றார். இவர் ஆசிரியர் சேவை வகுப்பு 1ச் சேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.


சிறப்பான பணிபுரிந்தமைக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.