முனைக்காடு பாரதி படிப்பகத்தில் பிரியாவிடை நிகழ்வு
முனைக்காடு பாரதி படிப்பகத்தில் பிரியாவிடை நிகழ்வு இன்று(07) சனிக்கிழமை நடைபெற்றது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு இவ்வருடம் டிசெம்பர் மாதம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வே இன்று நடாத்தப்பட்டது.
படிப்பகத்தின் தமிழ் பாட ஆசிரியர் பொ.திஜாந் தலைமையிலும், ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



Post a Comment