Header Ads

புலமைப்பரிசில் பரீட்சையில், வலயத்தில் முனைக்காடு சாதனை.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்;பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம்  தற்போது வெளியாகியுள்ள தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளியினருக்கு மேல் பெற்றுள்ளனர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.


முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்ற ஒன்பது மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் கல்விபயின்ற ஒரு மாணவனும், மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்.