முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாணவர்கள், பழையமாணவர்கள், பாடசாலை சமூகத்தினர் ஆகியோரின் ஏற்பாட்டில், நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில், ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், உதவிக்கல்விப் பணிப்பாளர் ரஞ்சிதமலர் கருணாநிதி, அதிபர், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Post a Comment