முனைக்காடு கிராமத்தில் கிராமிய விளையாட்டுக்களுடன் சிறுவர் தின நிகழ்வு
சிறுவர் தினத்தினை முன்னிட்டு, முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் சிறுவர் தின நிகழ்வு புதன்கிழமை(04) நடைபெற்றது.
சிறந்த நல்லொழுக்கமுள்ள பிரஜைகளாக உருவாகுவோம், உருவாக்குவோம் என சத்தியபிரமாணம் சிறுவர்கள் செய்து கொண்டதனை தொடர்ந்து, சிறுவர்களுக்கிடையில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன.
சுரக்காய் இழுத்தல், பூக்குட்டி, வார்போர், வட்டக்காவடி போன்ற கிராமிய விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டதுடன், வெற்றிபெற்றவர்களுக்கு பரசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



Post a Comment