போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு
போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளில், முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கும், கிராமத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்குமான விழிப்புணர்வு செயலமர்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது, எந்தவித போதைப்பொருட்களையும் நுகரமாட்டேன் என மாணவர்களும், இளைஞர், யுவதிகளும் சத்தியம் செய்துகொண்டனர். மேலும் போதையற்ற நாட்டினை உருவாக்கும் வகையிலான குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வித்தியாலய அதிபர், பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர், அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment