முனைக்காடு வித்தியாலயத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்று இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(14) செவ்வாய்க்கிழமை வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவு சின்;னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
பாடசாலை சமூகம், பெற்றோர் இணைந்து இப்பாராட்டு நிகழ்வினை ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Post a Comment