Header Ads

குகநாதனின் நாடகப்பிரதி தேசிய மட்டத்தில் முதல்நிலை



 முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த இளையதம்பி குகநாதனால் எழுதப்பட்ட மாறால் எனும் நாடகப்பிரதி கொழும்பு றோயல் கல்லூரியால் நடாத்தப்பட்ட தேசியமட்ட நாடகப்பிரதி போட்டியில் முதல்நிலையை பெற்றுள்ளது.

இதன் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் கொழும்பு றோயல் கல்லூரியில், அதன் அதிபர் டி.ய.அவயரெத்ன தலைமையில் நடைபெற்றது. இதன் போது முதன்நிலை பெற்ற நாடகப்பிரதிக்காக சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


போட்டியில் வெற்றிபெற்ற நாடகப்பிரதிகளை உள்ளடக்கிய விம்பம் என்ற புத்தகமும் இதன்போது வெளியீடு செய்யப்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக வெளியீட்டு வரும் குறித்த புத்தகத்தில் குகநாதனின்  மூன்று நாடகப் பிரதிகள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று இவரால் நெறியாழ்கை செய்யப்பட்ட நாடகங்கள் பலவும் தேசிய மட்டம், மாவட்ட மட்டங்களில் முதன்நிலைகளை பெற்றுள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது.