சாதனை படைத்த முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும், துரைராசசிவம் பகவதன் என்ற மாணவன் கிழக்கு மாகாணமட்டத்தில் நடாத்தப்பட்ட, ஆங்கில கவிதை கூறுதல் போட்டியில் முதலிடத்தினைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட குறித்த ஆங்கிலப் போட்டியில், குறித்த மாணவன், தரம் - 8பிரிவில், கோட்டம், வலயம், மாவட்ட ரீதியாக வெற்றிபெற்று, அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் முதலிடத்தினைப் பெற்று, தேசியமட்ட போட்டிக்காக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்விரீதியாக பின்தங்கிய நிலையில் காணப்பட்டு, சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வருகின்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவன், தேசிய ரீதியிலான போட்டிக்கு இடம்பிடித்துள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.






Post a Comment