Header Ads

தேசியத்தில் முதலிடத்தினைப்பெற்ற முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் நாடகம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர்களின் “வேட்கை நாடகம்” தேசியமட்டத்தில் முதலிடத்தினைப்பெற்றுள்ளது.


கொழும்பு றோயல் கல்லூரியினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நாடகப்போட்டியிலேயே குறித்த நாடகம் முதலிடத்தினைப்பெற்றுள்ளது. இந்நாடகத்திற்கான பரிசில் வழங்கும் நிகழ்வு கொழும்பு றோயல் கல்லூரியில் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளதுடன், இறுதிநிகழ்வில் குறித்த நாடகம் ஆற்றுகை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நாடகத்தினை இ.குகநாதன்  ஆற்றுகை செய்திருந்தார்.

நாடகத்தில் பாத்திரமேற்று நடித்த அனைத்து மாணவர்களுக்கும், உதவிய உள்ளங்களுக்கும்  முனைமண்ணின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.





கருத்துகள் இல்லை