Header Ads

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்திற்கு சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் இன்று(03) செவ்வாய்க்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.



தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் நிதியொதுக்கீட்டின் கீழ் இவ்வேலை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.




குறித்த அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் வேண்டுகோளுக்கமைய 10இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லினையும மாவட்ட இணைப்பாளர் க.கோபிநாத் நட்டு வைத்தார்.








கருத்துகள் இல்லை