Header Ads

முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாவிஷேகம்


 மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாவிஷேகம் எதிர்வரும் 28.04.2021ம் திகதி புதன்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகி 01.05.2021ம் திகதி சனிக்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்று 02.05.2021ம் திகதி காலை 5மணிக்கு குடமுழுக்கும் நடைபெற உள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். 

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான குழுவினர்  கும்பாவிஷேக கிரியை,  வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.


குடமுழுக்கை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று 13.05.2021ம் திகதி சங்காபிஷேகத்துடன் நிறைவு பெற இருக்கின்றது.

கருத்துகள் இல்லை