Header Ads

வலயத்தில் 7ம் இடத்தினைப்பெற்ற முனைக்காடு விவேகானந்தர் மகா வித்தியாலயம்


அண்மையில் வெளியாகிய கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்தர் மகா வித்தியாலயம், குறித்த வலயத்தில் சித்தி வீத தரப்படுத்தலில் 7ம் இடத்தினைப் பெற்றுள்ளது. 

குறித்த பாடசாலையில் இருந்து 51மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 38மாணவர்கள் 3சீ, 3எஸ் சித்திகளைப்பெற்று உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். அவ்வகையில் குறித்த பாடசாலை 74.51 சித்தி வீதத்தினை பெற்றுள்ளது. 

குறித்த பரீட்சையில் தோற்றிய அருளானந்தம் சண்முகப்பிரியா என்ற மாணவி 8ஏ,சீ சித்தியை பெற்றுள்ளமையுடன், குறித்த பாடசாலையின் அதிககூடிய பெறுபேறாக இப்பெறுபேறு பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை