ஒளிக்கல்லூரியில் சட்ட ஆலோசனை மையம் திறப்பும் புதிய வகுப்புகள் ஆரம்பமும்
"ஒளிக்கல்லூரி" அமைப்பின் மீள் செயற்படுத்தலும், சட்ட ஆலோசனை மையம் திறப்பு நிகழ்வும் இன்று(16) புதன்கிழமை இடம்பெற்றது.
ஒளிக்கல்லூரி அமைப்பின் முன்னாள் அதிபர் க.மகேசரெத்தினம் தலைமையில், முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஒளிக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் பொருட்டு சிரேஷ்ட சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தலைமையிலான சட்டத்தரணி குழுவினாரால் சட்ட ஆலோசனை மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
மேலும், சிறுவர்களுக்கான இலவச ஆங்கில வகுப்பும் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதன்போது, ஒளிக்கல்லூரி அமைப்பின் முன்னாள் அதிபர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Post a Comment