Header Ads

புதிய கட்டிட திறப்பு விழாவும், வாழ்வாதார உதவி வழங்கலும்.

 

புதிய கட்டிட திறப்பு விழாவும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை  (19) இடம்பெற்றது.


முனைக்காடு கடல்கடந்த முனையின் கரங்களின் 6வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், எட்டு பயனாளிகளுக்கு ரூபா 5000/- பெறுமதியான உலர் உணவு பொதிகளும், ஒரு நபருக்கு ரூபா 10000/- பெறுமதியான வாழ்வாதார நிதியுதவியும் வழங்கப்பட்டது.


மேலும் ஓய்வு பெற்ற கல்வியதிகாரிகள், பல்கலைக்கழக சாதனயாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமிர்த்தம் வாழும் கிராமத்து உறவுகளின் நிதியுதவியில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிகள், கடல்கடந்த உறவுகளின் அமைப்பு தலைவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.









கருத்துகள் இல்லை