முனைக்காடு பாடசாலைகளில் 12பேர் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல்
அண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விவேகானந்த மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இருந்து தோற்றிய 44பேரில் 10மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 44மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 40 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
வலயத்தில் அதிகூடிய மாணவர்களை மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கிராமத்தில் அமைந்துள்ள சாரதா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 2மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்., 24மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தமையுடன் இவர்களில் 18பேர் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
Post a Comment